கவர்னர் மாளிகையில் திருவள்ளூவர் சிலை திறப்பு

June 19, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூன் 19 (டி.என்.எஸ்) சென்னை கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை நிறுவவேண்டும் என்று தமிழக (பொறுப்பு) கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.


இதன்படி, கவர்னர் மாளிகை வளாகத்தில் 4 அடி உயரம், 4½ அடி அகலம் கொண்ட திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலையில் நடந்தது.

இதில் கவர்னர் வித்யாசாகர் ராவ் கலந்துகொண்டு, திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமசந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஜார்கண்ட் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம், சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, இந்திய செஞ்சிலுவை சங்க (தமிழ்நாடு கிளை) துணைத்தலைவர் டாக்டர் வடிவேல் முகுந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கவர்னரின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா வரவேற்று பேசினார். துணை செயலாளர் முரளிதரன் நன்றி கூறினார்.