.

கல்யாணம் குறித்து பிரியா பவானி சங்கர் அறிவிப்பு

July 11, 2018, Chennai

Ads after article title

செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சீரியல் நடிகையாக உயர்ந்த பிரியா பவானி சங்கர், 'மேயாத மான்' படத்தின் மூலம் ஹீரோயினாக பிரபலமாகியுள்ளார்.


தற்போது கார்த்தியுடன் 'கடைக்குட்டி இசங்கம்' படத்தில் நடித்திருப்பவர், இயக்குனர் எஸ்.ஜெ.சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும், சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கல்யாணம் குறித்து  கூறுகையில், "எனது திருமணம் குறித்து வெளியாகும் தகவல்கள் எல்லாமே வதந்திதான். நான் திருட்டு கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன். திருமணம் செய்வதாக இருந்தால் ஊரை கூட்டி சந்தோ‌ஷமாக செய்துகொள்வேன். 

சீரியலில் நடிப்பதை நிறுத்திய போது நான் திருமணத்துக்காக தான் நிறுத்தியதாக நினைத்துக் கொண்டார்கள் போல. நான் இதற்கு எல்லாம் விளக்கம் தருவதில்லை. எனவே செய்தி பரவி விட்டது." என்று தெரிவித்துள்ளார்.