.

கலைஞர் மறைவையொட்டி நிறுத்தப்பட்ட விஜய் பட படப்பிடிப்பு!

August 08, 2018, Chennai

Ads after article title

திமுக தலைவர் மு.கருணாநிதி இறந்தை தொடர்ந்து இன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், சில தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே நேற்று மாலை முதல் சினிமா தியேட்டர்கள் இயங்காது என்றும், இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வந்த விஜயின் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கருணாநிதி இறந்த செய்தியை அறிந்ததும், அவருக்கு அஞ்சலி செலுத்திய ‘சர்கார்’ படக்குழு படப்பிடிப்பையும் நிறுத்தியுள்ளது. சின்னும் சில நாட்கள் கழித்து படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.