.

கருணாநிதி மறைவையொட்டி டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ரத்து

August 08, 2018, Chennai

Ads after article title

தமிழகம் முழுவதும் 3 வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரின், இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி திண்டுக்கல்லில் நடைபெற இருந்தது.


அதேபோல், இன்று இரவு மற்றொரு தகுதி சுற்று போட்டியும் நடைபெற இருந்தது. இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானதால், இந்த இரண்டு போட்டிகளும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது மறைவுக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட இவ்விரு ஆட்டங்களும் மற்றொரு தேதியில் நடத்தப்படும், அதன் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.