.

கருணாநிதியில் உடல் நிலை குறித்து விசாரித்த மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

August 04, 2018, Chennai

Ads after article title

திமுக தலைவர் மு.கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என்று ஏராளமானவர்கள் மருத்துவமனைக்கு வந்துக் கொண்டிருக்கிறார்கள்.


 

இந்த நிலையில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தனர். அவர்களுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நலம் விசாரித்தார்.