.

கருணாநிதிக்கு விளையாட்டு வீரர்கள் இரங்கல்!

August 09, 2018, Chennai

Ads after article title

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டும் இன்றி பிற விளையாட்டு வீரர்களும் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.


ஆர்.அஸ்வின் (சுழற்பந்து வீச்சாளர்): கலைஞரின் மறைவு செய்தி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஹர்பஜன்சிங் (சுழற்பந்து வீச்சாளர்): சூரியன் முழுமையாக அஸ்தமித்து விட்டது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும், மிக்காரும் இல்லா தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடுசெய்ய முடியாதது. இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை. முத்தமிழின் மூத்த மகனுக்கு எனது வீர வணக்கம்.

முரளி விஜய் (தொடக்க ஆட்டக்காரர்): தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் முன்னேற்றத்துக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட சிறந்த தலைவர். அவரது மறைவு பேரிழப்பாகும்.

விஸ்வநாதன் ஆனந்த் (முன்னாள் உலக செஸ் சாம்பியன்): தமிழகத்தின் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவரை நான் சிலமுறை சந்தித்து பேசி மகிழ்ந்து இருக்கிறேன். முதல்முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற போது அவர் என்னை பாராட்டியதோடு ஒரு செஸ் போர்டை வழங்கினார். அது மறக்க முடியாத பரிசாகும். அவர் விளையாட்டின் புரவலர். அவரது பேச்சாற்றல் என்னை மிகவும் கவர்ந்ததாகும்.

இவர்களை போல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், முன்னாள் பேட்ஸ்மேன்கள் வி.வி.எஸ். லட்சுமண், முகமது கைப் மற்றும் சுரேஷ் ரெய்னா, வாஷிங்டன் சுந்தர் உள்பட பலரும் அனுதாபம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.