.

கடவுள் அருள் இருந்தால் தான் முன்னேற முடியும் - ரஜினிகாந்த்

July 12, 2018, Chennai

Ads after article title

ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் குறித்து பலர் விமர்சித்து வரும் நிலையில், உழைத்தால் மட்டும் முன்னேறிவிட முடியாது , கடவுள் அருள் இருந்தால் தான் முன்னேற முடியும், என்று ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கல்வி நிறுவன அதிபர் ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதற்காக அவருக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக்க கொண்டு ஏ.சி.சண்முகத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில்  பேசிய ரஜினிகாந்த், "உழைத்தால் மட்டும் வாழ்க்கையில் முன்னேறிவிட முடியாது, கடவுள் அருள் இருக்க வேண்டும், நல்ல மனம் இருக்க வேண்டும். எப்போதும் உடலை பிசியாக வைத்துக் கொண்டாள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்." என்று கூறினார்.