.

ஒலிம்பிக் போட்டியில் கபடி இடம்பெறும் - அமைச்சர் நம்பிக்கை

August 07, 2018, Chennai

Ads after article title

ஒலிம்பிக் போட்டியில் கபடி நிச்சயம் இடம்பிடிக்கும், என்று அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்திருக்கிறார்.


இது குறித்து டெல்லி மேல் சபையில் நேற்று  பேசிய அமைச்சர் ராஐஐவர்தான் சிங் ரத்தோர், "‘பலம், திறமை, வேகம், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய கபடி ஆட்டம் தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது. மிகவும் குறைந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தும் இந்த போட்டியை நிச்சயம் உலகம் ஏற்றுக்கொள்ளும். இறுதியாக கபடி ஆட்டம் விரைவில் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறும் என்று நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.