ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளுக்கு தாயான பெண்!

April 21, 2017, Chennai

Ads after article title

ராஜபாளையம், ஏப்.21 (டி.என்.எஸ்) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்த பதினெட்டாம்படியான் (29), பானுமதி (24) தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.


இந்நிலையில், பானுமதி கர்ப்பமானதை தொடர்ந்து ராஜபாளையத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

பானுமதிக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது வயிற்றில் 4 குழந்தைகள் வளர்வதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பானுமதிக்கு கூடுதல் அக்கறையோடு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த பானுமதிக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் குழு பானுமதிக்கு அறுவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளையும் வெளியே எடுத்தனர். 

தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.