.

ஒரே நாளில் 3 சங்கங்கள் போராட்டம் : ஸ்தம்பிக்க போகும் தமிழகம்

May 26, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 26 (டி.என்.எஸ்) ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து வரும் மே 30 ஆம் தேதி மருந்து வணிகர்கள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.


அதேபோல், ஜி.எஸ்.டி வரி உயர்வை எதிர்த்து மே 30 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஓட்டல்களும் மூடப்படும், என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்து வரும் 30 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். 

இவ்வாறு ஒரே நாளில் மூன்று முக்கிய சங்கங்கள் கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளதால் அத்யாவசிய பொருட்கள் கிடைக்காமல் மே 30 ஆம் தேதி தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.