.

ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இன்று நடக்கிறது

August 09, 2018, Chennai

Ads after article title

3 வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. தற்போது இறுதி கட்டத்தய் எட்டியுள்ள இத்தொடரின், இறுதி போட்டிக்கு தகுதி பெரும் தகுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், திமுக தலைவர் மு.


கருணாநிதி மறைவையொட்டி போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரத்ததான இரண்டு போட்டிகளும் இன்று நடத்தப்படுகிறது. மாலையில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணியும், இரவு நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன.

இந்த இரண்டு போட்டிகளும் திண்டுக்கல்லில் உள்ள நத்தத்தில் நடைபெறுகிறது.