ஐபில் : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது புனே

May 17, 2017, Chennai

Ads after article title

மும்பை, மே 17 (டி.என்.எஸ்) 10 வது ஐபில் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப் போட்டிக்குள் நுழையும், முதல் குவாலிபையர் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது.


இதில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த புனே அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்டசமாக மனோஜ் திவாரி 58 (48) ரன்களும், ரஹானே 56 (43) ரன்களும், டோனி 40 (26) ரன்களும் எடுத்தனர். 

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும், அடுத்தடுத்து விக்கெட்கள் சரிவால், ரன் சேர்க்க தடுமாறியது. மறுமுனையில் பார்த்திவ் படேல் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறியதால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன் மூலம், மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இன்று நடைபெற உள்ள கொல்கத்தா - ஐதராபாத் இடையிலான எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மும்பை அணி மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 21 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் புனேவுடன் மோதும்.