ஐபிஎல் : புனேவை வீழ்த்தியது டெல்லி

May 13, 2017, Chennai

Ads after article title

டெல்லி, மே 13 (டி.என்.எஸ்) நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் 10 வது ஐபில் கிரிக்கெட் தொடரின் 52 வது லீக் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது.


இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய புனே அணி, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 161 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால், டெல்லி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.