ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

May 09, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 09 (டி.என்.எஸ்) சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டு தங்களது ஆயிரக்கனக்கான ஊழியர்களின் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்பா முடிவு செய்துள்ளதாம்.


சமீபகாலமாக தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவினால், ஐடி நிறுவனங்கள் பெரும் நஷ்ட்டத்தை சந்தித்து வருவதாகவும், இதன் காரணமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பல ஐடி நிறுவனங்கள், 
2008 முதல் 2010 வரை பணியில் சேர்ந்த தொழிலாளர்களை எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்ய தயாராகி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

காக்னிசண்ட் நிறுவனத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் ஊழியர்களின் பணி பறிபோகும் என்றும், இன்போசிஸ் நிறுவனத்தில் 1000 பேரும், விப்ரோவில் 10 சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் மூத்த ஊழியர்களின் சீட்டை கிழிக்கும் ஐடி நிறுவனங்கள், ஆண்டு முடிவில் இளம் ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.