.

ஏமன் நாட்டில் குழந்தைகள் சென்ற பேருந்து மீது தாக்குதல் - பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு

August 10, 2018, Chennai

Ads after article title

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.


இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

இதற்கிடையே, ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தில் சென்ற 12 குழந்தைகள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. 

ஆனால், தற்போது அந்த பேருந்தில் பயணம் செய்த 29 குழந்தைகளும் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.