.

எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் ஆலோசனை கேட்கும் பிரபல தமிழ் இயக்குனர்

August 09, 2018, Chennai

Ads after article title

'பாகுபலி' படத்தின் வெற்றிக்கு பிறகு இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநராகியிருக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி, 'மஹதீரா' படத்திலேயே வரலாற்று படங்களில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை நிரூபித்துக் சின்ன அளவில் நிரூபித்துக் காட்டினார்.


பிறகு 'பாகுபலி' மூலம்  தனது வரலாற்று ஜானர் படங்கள் மீதான  ஆர்வத்தின் விஸ்வரூபத்தை காட்டியதோடு, அதன் மூலம் பெற்ற வெற்றியால் தற்போது, வலராற்று திரைப்படங்களுக்கான டிஸ்னரியாகவும் மாறியிருக்கிறார். 

அந்த வகையில், வரலாற்றுப் படங்கள் இயக்கம் இயக்குனர்கள் சிலர் ராஜமவுலியை சந்தித்து டிப்ஸ் கேட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில், தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும் சசிகுமார், சமீபத்தில் ராஜமவுலியை சந்தித்து பேசியிருக்கிறார். உடனே, அவர் ராஜமவுலி படத்தில் நடிக்க போவதாக தகவல் பரவ, அதெலாம் இல்லை, என்று மறுத்திருக்கும் சசிகுமார், தான் விரைவில் வரலாற்று பின்னணி கொண்ட படம் ஒன்றை இயக்க போவதாகவும், அதற்காக ராஜமவுலியிடம் ஆலோசனை பெற்றதாகவும் கூறியிருக்கிறார்.