எரிமலை பிழம்பு போல வெளியாகும் நுரை : பீதியில் வண்ணாரப்பேட்டை மக்கள்!

April 20, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.20 (டி.என்.எஸ்) வட சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான வண்ணாரப்பேட்டையில் நேற்று தெருக்கள் மற்றும் வீடுகளில் இருந்து எரிமலை பிழம்பு போல சாம்பல் நிறத்தில் நுறை வெளியானது.


அப்பகுதியில் உள்ள சில தெருக்களிலும், வீடுகளில் இருந்தும் திடீரென்று சாம்பல் நிறத்தில் நிறை வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சில இடங்களில் சோப்பு கலந்தாற்போல் நிறை வர, சில இடங்களில் சிமெண்ட் கலவை போல நிறை வெளியானது. ஆரம்பத்தில் சிறிய அளவில் வெளியான இந்த நுரை, போக போக, குபீர் குபீர் என்று பீரிட்டு வெளியானபடியே இருந்ததால், சில மணி நேரங்களில் அப்பகுதியே சாம்பல் வண்ணத்தில் மாறியது.

இதையடுத்து அந்த நுரையை சுத்தம் செய்யும் பணியில் அப்பகுதி மக்களும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டு, நுரைகளை வெளியேற்றி வருகிறார்கள்.

ஏற்கனவே சென்னையில் சில இடங்களில் சாலைகளில் ஏற்பட்ட திடீர் பள்ளங்களில் இருந்து இதுபோன்ற சிமெண்ட் கலவைகள் வெளியான நிலையில், தற்போது குடியிருப்பு பகுதிகளிலும், வீடுகளில் இருந்து நுரை வெளியாகியிருப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது.