எம்.எல்.ஏ-விடுதியில் 17 வயது சிறுமி கற்பழிப்பு

April 21, 2017, Chennai

Ads after article title

நாக்பூர், ஏப்.21 (டி.என்.எஸ்) மகராஷ்டிரா மாநில எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் 17 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மனோஜ் பகத்(44) என்பவர் தனது கடையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுமியின் பெற்றோரிடம் தனது குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்குமாறு கூறி, நாக்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ-விடுதியிக்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளார். பின்னர் இவருடன் மாத்ரே என்பவரும் சேர்ந்து அந்த சிறுமியை கற்பழித்ததாக கிட்டிஹாதான் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஷாலினி கினெக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிறுகியிடம் விசாரணை நடத்தி மேற்கண்ட தகவல்களை பெற்ற பிறகு, மனோஜ் பகத், மாத்ரே ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.