.

எதிர்க்கட்சி தலைவருடன் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட கேரள முதல்வர்

August 11, 2018, Chennai

Ads after article title

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.


இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 29 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் அவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெள்ள சேதங்களை ஆய்வு செய்தார். அவருடன் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோரும் உடன் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர்.