.

எங்களுக்காகவும் ஒரு படம் பண்ணுங்க - அனிருத்திடம் கோரிக்கை வைத்த சிவா

August 10, 2018, Chennai

Ads after article title

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்ட சிவகார்த்திகேயனின் பெரும்பாலான படங்கள் பாடல்களுக்காகவே ஓடியது என்று சொல்லாலாம்.


அப்படி சிவகார்த்திகேயனின் படங்களில் ஹிட்டான பாடல்கள் கொடுத்தவர்கள் பட்டியல் எடுத்தால் அதில் அனிருத் தான் முதலிடத்தில் இருப்பார்.

அதனால் சிவகார்த்திகேயன் - அனிருத் நட்பு சினிமாவை தாண்டியும் பயணிக்கிறது. இதற்கிடையே, அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலையும் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் ஒன்றில் அனிருத் தோன்றி நடனம் ஆடுகிறார். இதனைப் பார்த்த சிவகார்த்திகேயன், எங்களுக்காகவும் இப்படி ஒரு படம் பண்ணுங்க சார், என்று அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.