.

உலகக் கோப்பை கால்பந்து - நாளை காலியிறுதி போட்டிகள் தொடக்கம்

July 05, 2018, Chennai

Ads after article title

ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21 வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் காலியிறுதி போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது.


 

ரஷியா, பிரேசில், உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவீடன், பெல்ஜியம், குரோஷியா ஆகிய 8 அணிகள் மோதும் இப்போட்டிகளில் வெற்றி பெரும் 4 அணிகள் அரையிறுதிக்கு தேர்வு பெரும்.

அதன்படி, நாளை (ஜூலை 6) காலியிறுதி போட்டிகள் தொடங்குகின்றன. இந்திய நேரடிப்படி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் காலியிறுதிப் போட்டியில் உருகுவே - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளன. இதில் பிரான்ஸ் 1 தடவைதான் வெற்றி பெற்றுள்ளது. உருகுவேயிடம் 3 முறை தோற்றுள்ளது. 4 ஆட்டம் டிரா ஆனது.