.

உதயநிதி முதல் முறையாக இதை செய்கிறார்!

July 06, 2018, Chennai

Ads after article title

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் 'கண்ணே கலைமானே' படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கிறார்.


இப்படத்தில் நடிப்பதோடு தனது சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூலம் இப்படத்தை உதயநிதி தயாரிக்கவும் செய்கிறார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் உதயநிதி, முதல் முறையாக இளையராஜா இசையில் நடிக்கிறார்.