இலையில் உப்பு கைக்கு எட்டாத இடத்திலும், இனிப்பு அருகாமையில் வைப்பதற்கும் காரணம் தெரியுமா?

April 04, 2017, Chennai

Ads after article title

April 3: தலைவாழை இலையில் முதலாவதாக உப்பு கைக்கு எட்டாத இடத்தில் இடப்படும். அடுத்ததாக இனிப்பு பரிமாறபடும். இதன் காரணம், ஒருவேளை  தெரியாமல் உப்பு அல்லது மிளகாயை ருசித்து விட்டால் உடன் உட்கொள்ள இனிப்பு அருகாமையில் வைக்கபடும்.


நடுவில் அன்னம் மற்றும் அதை  சுற்றி கூட்டு, பொறியல், அவியல் பரிமாறபடும்.

ஆனால் இது வரை கூறியவையில் அறிவியல் எங்கு உள்ளது? நமது கலாச்சாரத்தில் வாழைக்கு  முக்கிய பங்கு உள்ளது. வாழை ஒரு கிறுமி நாசினி ஆகும். உணவில் உள்ள நச்சு கிறுமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது. நன்கு பசியை தூண்டுவதோடு அதில் உள்ள பச்சை தன்மை வயிற்று புண்ணை ஆற்றவல்லது. வாழை இலையில் தொடர்ந்து உண்டால் தொல் பளபளப்பாகும்  அதொடு மந்தம், வலிமைக்குறைவு, இளநரை போன்ற அனைத்தும் குணமாகும். தங்க தட்டில் பகட்டோடு உண்ண கற்ப்பிக்கவில்லை நமது முண்ணோண் மாறாக ருசியோடும், ஆரோக்யத்தோடும் வாழ உணவிலும் அறிவியலை புகுத்தியவன் தமிழன்.