.

இயக்குநரை சூழ்ந்துக்கொண்ட ரசிகர்கள் - ’விஸ்வாசம்’ படப்பிடிப்பில் பரபரப்பு

July 10, 2018, Chennai

Ads after article title

வீரம், வேதாளம், விவேகம் என அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியிருக்கும் சிவா, தற்போது நான்காவது படமாக ‘விஸ்வாசம்’ படத்தை இயக்கி வருகிறார்.


இதில் நயந்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அப்பா, மகன் என அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், இப்படத்தின் பஸ்ட் லுக் இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் இயக்குநர் சிவாவை படப்பிடிப்பு தளத்தில் சூழ்ந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், படம் எப்படி வந்திருக்கிறது, எப்படி இருக்கும், எந்த மாதிரியான கதை என்று அவர்கள் சிவாவிடம் கேட்டதால், படப்பிடிப்பு தளத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டதாம்.

பிறகு அவர்களிடம் பேசிய இயக்குன்நர் சிவா, ”இது, தல மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் படம்” என்று பதில் அளிக்க ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்களாம்.