.

இன்று ஆடி அமாவாசை - ராமேசுவரத்தில் புனித நீராடிய பக்தர்கள்

August 11, 2018, Chennai

Ads after article title

ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் நன்மைகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.


இதன் காரணமாக இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்திற்கு வருவார்கள். அதன்படி ஆடி அமாவாசையான இன்று ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை முதலே ரயில், வேன், பஸ், கார்கள் மூலம் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

ஆடி அமாவாசையான இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

முன்னதாக கோவிலில் இருந்து ராமர் அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளினார். பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அப்போது அங்கு கூடி இருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கடலில் நீராடிய பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினர். இதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.