இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்

June 19, 2017, Chennai

Ads after article title

ஜகர்தா, ஜூன் 19 (டி.என்.எஸ்) இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டித் தொடர் ஜகர்தாவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் கசுமசா சகாயை எதிர்கொண்டார்.


 

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் ஸ்ரீகாந்த் 21-11, 21-19 என்ற நேர் செட்டில் 37 நிமிடங்களில் சகாயை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைச் வென்றார். அவருக்கு ரூ.48¼ லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.

35 ஆண்டு கால இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் வரலாற்றில் இந்த கோப்பையை இந்திய வீரர் ஒருவர் வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்திய வீராங்கனைகளில் சாய்னா நேவால் இந்த பட்டத்தை மூன்று முறை (2009, 2010, 2012) வென்று இருக்கிறார்.