.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் தொடர் நாளை தொடக்கம்

July 11, 2018, Chennai

Ads after article title

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது.


இதன் முதல் போட்டி நாட்டிங்காமில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. சோனி சிக்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அணி விபரங்கள்:

இந்தியா:  விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், ரெய்னா, டோனி, ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தினேஷ்கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார், ‌ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து:  மார்கன் (கேப்டன்), ஜேசன்ராய், பட்லர், மொய்ன்அலி, பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹால்ஸ், ஜோரூட், பென்ஸ்டோகஸ், ஜேக்பால், டாம் குர்ரான், புளுன்கெட், ஆதில்ரஷீத், டேவிட் வில்லி, மார்க்வுட்.