.

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2 வது டெஸ்ட் - முதல் நாள் போட்டி கைவிடப்பட்டது

August 10, 2018, Chennai

Ads after article title

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.


இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதற்கிடையே, 2 வது டெஸ்ட் போட்டி நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் சுண்டப்படுவதற்கு முன் மழை பெய்தது. தொடர்ந்து மழைத்தூறல் இருந்து கொண்டே இருந்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை.

அதன்பின்னரும் மழைத்தூறல் விட்டுவிட்டு தூவிக் கொண்டிருந்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.