ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் திட்டம் : அமைச்சர் குற்றச்சாட்டு

April 21, 2017, Chennai

Ads after article title

ராமேசுவரம், ஏப்.21 (டி.என்.எஸ்) திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க மறைமுகமாக முயற்சித்து வருவதாக, தமிழக அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.


ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழக அமைச்சர்கள் மணிகண்டன், சம்பத் ஆகியோர் வந்தனர். பிறகு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:

தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட 18 படகுகளுக்கும் தலா ரூ. 5 லட்சம் உதவியை முதல்வர் வழங்கியுள்ளார்.

வருகிற மே மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்ல உள்ளார். அப்போது அங்குள்ள 142 விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு அம்மா ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் 90 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தரக்குறைவாக பேசி வருகிறார். தமிழக அரசு முடங்கியுள்ளதாக கூறி இருப்பதை கண்டிக்கிறோம்.

ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மறைமுகமாக மேற்கொண்டு வருகிறார். எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் தரமாக பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.