.

ஆடி மாத ராசிபலன்கள்: மேஷம் முதல் கன்னி வரை

July 19, 2018, Chennai

Ads after article title

மேஷம்:

இந்த மாதம் குருபகவான் முன்னேற்றத்தை கொடுப்பார். சுக்கிரன் ஆக. 2 வரை நன்மை தர காத்திருக்கிறார். அதன் பின் கன்னி  ராசிக்கு மாறுவதால் அவரால் நற்பலன் கொடுக்க முடியாது.


உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கும் புதன் பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கச் செய்வார். சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி எண்ணம் மேம்படும்.  ஆக. 2 க்கு பிறகு அவரால் முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். குரு பகவான் துலாம் ராசியில் இருந்து நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.  குறிப்பாக குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம், நல்ல பணப் புழக்கத்தைத் கொடுத்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு சிறப்பாக நடந்தேறும். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். பொருளாதார வளம் சிறக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். ஆக.2 க்கு பிறகு கலைஞர் சுமாரான நிலையில் இருப்பர். முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். நற்பெயர், புகழுக்கு பங்கம் வராது. புதிய ஒப்பந்தம் அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.    

ரிஷபம்:

வெற்றி நோக்குடன் செயல்பட்டு முன்னேறும் ரிஷப ராசி அன்பர்களே! சூரியன், சுக்கிரன், ராகு மாதம் முழுவதும் நன்மை செய்வார்கள். ராகு செயலில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் விருத்தியை தந்து கொண்டிருக்கிறார். தற்போது குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப்பார்வை சாதகமாக உள்ளதால் பிரச்னையை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். பொருளாதார வளம் பெருகும் மாதமாக இது அமையும். சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய உறவினர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும்.  ஆக.2 க்கு பிறகு பெரியோர் களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள்  உதவிகரமாக இருப்பர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். கணவன்- மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை மறையும். ஆக.6,7ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக. 1,2 ல் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மை கிடைக்கும். மாணவர்களுக்கு சுமாரான நிலையே தொடர்கிறது. புதன் சாதகமாக இல்லாததால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. இருப்பினும் குருவின் பார்வையால் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சிலர் அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர். பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆக. 2 க்கு பிறகு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புத்தாடை அணிகலன் கள் கிடைக்கப் பெறுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஜூலை 22,23,24 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கும். ; சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். ஆக. 2க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த கடனுதவி வங்கி மூலம் பெறுவர்.

மிதுனம்:

இந்த மாதம் சுக்கிரன், குரு இருவரும் முன்னேற்றம் அளிக்க காத்திருக்கின்றனர். குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருக்கிறார். குருபகவான் ; குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபவிஷய பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். குடும்பத்தில் சுக்கிரனால் இனிய அனுபவம் காண்பீர்கள். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும்.  ஆக.2க்கு பிறகு விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். உறவினர்களிடம் சுமுக நிலை உண்டாகும். புதிய உறவினர்கள் மூலம் உதவி காண்பீர்கள். பெண்கள் ஆதரவாக செயல்படுவர். குறிப்பாக ஆக. 8,9ல் அவர்களால் அதிக அனுகூலம் பெறலாம்.  ஆக. 3,4,5ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஜூலை 17, ஆக.12,13 ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பணியாளர்கள் சுக்கிரனால் சிறப்பான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு குறையும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஆக.1,2 ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ; மதிப்பு, மரியாதை கூடும். ஆக.2 க்குள் அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் பொது நலசேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. ஜூலை 20,21, ஆக.16 ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் விடாமுயற்சியும் கூடுதல் கவனமும் தேவை. இருப்பினும் குருபகவானால் ஓரளவு முன்னேற்றம் காணலாம். நடக்கும். ஆனால் புதனால் அவ்வப்போது வீண் பிரச்னை உருவாகி மறையும்.

கடகம்:

பணியாளர்களுக்கு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் திடீர் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. வேலையில் கூடுதல் கவனமுடன் இருக்கவும். பணிச்சுமையை சந்திக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் உங்கள் உழைப்புக்கு ஏற்றபலன் கிடைக்காமல் போகாது. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்வது நல்லது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ; சுக்கிரனால் அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர். கோரிக்கைகள் ஓரளவு நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஆக.2 க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு வரும். ஆக. 3,4,5 ல் எதிர்பாராத நன்மை உண்டாகும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். மாணவர்கள் சிரத்தையுடன் படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவது நல்லது. விவசாயிகளுக்கு  மானாவாரி பயிர்கள் மூலம் விளைச்சல் பெருகும். கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக வருவாயை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. தூரத்து உறவினர்கள் வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும் உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஜூலை18,19, ஆக.14,15ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கப் பெறலாம். ஜூலை 27,28,29ல் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். ராகுவால் அக்கம்பக்கத்தினர் வகையில் மனக்கசப்பு வரலாம்.  

சிம்மம்:

முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கவலை வேண்டாம். ஆனால் அவரது ; அனைத்து பார்வைகளும் சிறப்பாக உள்ளதால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். குருவின் பார்வையால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவை பூர்த்தியாகும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடித் தருவர். ; உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் ; முன்னேற்றம் உண்டாகும். பெண்களால் மேன்மை கிடைக்கும். தற்போது செவ்வாய், கேது உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கின்றனர். புதன், சூரியன், குரு, சனி, ராகு நன்மை தர இயலாதவராக இரு க்கிறார்கள். செவ்வாய், கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். தற்போது குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருந்து முயற்சியில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். பெண்கள் குடும்பத்தினரின் மத்தியில் சிறப்பிடம் பெறுவர். அக்கம்பக்கத்தினரின் அன்பும், ஆதரவும் உண்டாகும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் உற்சாகம் அதிகரிக்கும் ; தடைபட்ட திருமண பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். ; வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். புதிய பதவி தேடி வரும். ; ஜூலை 30,31ல் அனுகூல பலன் காணலாம்.

கன்னி:

முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் வளர்ச்சி தரும் மாதமாக இது அமையும். ராசிக்கு 11-ல் இணைந்திருக்கும் சூரியன், புதன், 2-ல் உள்ள குரு, ; 11-ல் உள்ள ராகு நல்ல வளத்தை கொடுப்பார்கள். சுக்கிரன் ஆக.2 க்கு பிறகு உங்கள் ராசிக்கு வந்து நன்மை தருவார். சனிபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருப்பதால் பல்வேறு இடையூறுகளை சந்தித்திருப்பீர்கள். குடும்பத்தில் பகை, பிரிவை ஏற்படுத்துவார். அதற்காக கவலைப்பட வேண்டாம். சனிபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் 3-ம் இடத்துப் பார்வை ; சிறப்பாக உள்ளது. இதனால் உங்களுக்கு வரும் இடையூறுகள் அனைத்தும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். சூரியனால் நல்ல பணப்புழக்கம் இருக்கும். இந்த மாதம் கையில் இருப்பதை நிரந்தர சேமிப்பில் முதலீடு செய்வது நல்லது. புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். சமூகத்தில் மரியாதை மேம்படும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். குருவால் பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப் புண்டு. அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். ஆக.8,9 ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருக்கவும்.அதே நேரம் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை காணலாம். தொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கியில் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். பகைவர் தொல்லை இருக்கும் இடம் தெரியாமல் மறையும். ; வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். அதனால் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.