.

ஆடி மாத ராசிபலன்கள்: துலாம் முதல் மீனம் வரை

July 20, 2018, Chennai

Ads after article title

துலாம்

குடும்பத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். உங்கள் செல்வாக்கு வெளியே எப்படி இருந்தாலும் வீட்டில் தனி அந்தஸ்துடன் இருப்பீர்கள்.


கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். சகோதரிகளின் ஆதரவு இருக்கும். அவர்களால் நற்சுகம் கிடைக்கும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக ஜூலை 20,21 ஆக. 16 ல் அவர்களால் நன்மைகள்  கிடைக்கும்.  ஜூலை 17, ஆக. 12,13-ந் தேதிகளில் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பணியாளர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது. உங்கள் திறமைக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆக. 10,11ல் எதிர்பாராத நன்மை நடக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
தொழில், வியாபாரத்தில் குரு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலர் தொழிலில் மந்த நிலை ஏற்படலாம். ஆனால் உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். சூரியன் மற்றும் புதனால் வளர்ச்சி தடைபடாது. பகைவர்களின் இடையூறுகளை உடைத்தெறிவீர்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். ஆக.1,2 ஆகிய நாட்களில் அதிர்ஷ்டவசமாக வருமானம் கூடும். ஜூலை 18,19,22,23,24, ஆக.14,15 ல்  சந்திரனால் தடைகள் வரலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆக. 2 க்கு பிறகு காரியத்தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பலனை எதிர்பாராமல் உழைக்க  நேரிடும். ஜூலை 30,31ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

விருச்சிகம்:

இந்த மாதம் பிற்பகுதியில் சுக்கிரன் நற்பலனை வாரி வழங்குவார். செவ்வாய், கேது மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக் கின்றனர். தற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் பிற்போக்கான பலனைத் தான் நீங்கள் கண்டிருப்பீர்கள். குடும்பத்தில் பிரச்னை உருவாக்குவார். பொருளாதார இழப்பு ஏற்படலாம். அதற்காக கவலைப்பட வேண்டாம்.  சனிபகவான் சாதகமற்று இருந்தாலும் அவரின் 10-ம் இடத்துப் பார்வை  சிறப்பாக உள்ளது. இதனால் உங்களுக்கு வரும் இடையூறு அனைத்தும்  முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். அவரால் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய், கேதுவால் பக்தி மேம்படும். தெய்வ அனுகூலம் தொடர்ந்து  கிடைக்கும். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். புதன், சூரியனால் அவப்பெயர் வர வாய்ப்பு உண்டு. எனவே வீண் விவாதம் தவிர்க்கவும். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும். குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ஆக.2 க்கு பிறகு சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும்.  உறவினர் வருகை அடிக்கடி இருக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஜூலை 22,23,24 ல்  அதிர்ஷ்ட வசமாக பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஜூலை 18,19, ஆக.14,15 ஆகிய தேதிகளில் உறவினர் வருகை யும், அவர்களின் மூலம் நன்மை கிடைக்கும். ஆனால் ஜூலை 30,31-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று  ஒதுங்கி இருக்கவும். ஜூலை 27,28,29ல் ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.  பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். போலீஸ், ராணுவ பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.

தனுசு:

குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ஆக.2 க்கு பிறகு சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும்.  உறவினர் வருகை அடிக்கடி இருக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஜூலை 22,23,24 ல்  அதிர்ஷ்ட வசமாக பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஜூலை 18,19, ஆக.14,15 ஆகிய தேதிகளில் உறவினர் வருகை யும், அவர்களின் மூலம் நன்மை கிடைக்கும். ஆனால் ஜூலை 30,31-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று  ஒதுங்கி இருக்கவும். ஜூலை 27,28,29ல் ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.  பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். போலீஸ், ராணுவ பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர். செவ்வாயால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காணலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  விரும்பிய இடம், பணி மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். ஜூலை 18,19, ஆக. 14,15ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் குருவால் பொருளாதார வளம் கூடும். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். ஜூலை 22,23,24, 27, 28,29ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். ஆக. 6,7ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். செவ்வாயால் பகைவர் வகையில் தொல்லை வரலாம். ராகுவால் பங்குதாரர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.

மகரம்:

இந்த மாதம் சுக்கிரன் ஆக.2ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். இதனால் ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஆக.1 க்கு பிறகு பெண்கள் உங்களுக்கு உதவி கரமாக செயல்படுவர். குறிப்பாக ஜூலை 27,28,29 ஆகிய தேதிகளில் அவர்களால் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல் படுவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் திறமைக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. பதவி உயர்வுக்கு தடை இருக்காது. மேல் அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். ஜூலை 20,21, ஆக.16 ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். சிலர் பணி விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடும். தொழில், வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனைகளை ஏற்பது அவசியம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். சனியால்  பண  இழப்பு, வெளியூர் பயணம், எதிரிகளின் இடையூறு அவ்வப்போது ஏற்படலாம். ஆக.8,9ல் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்க வாய்ப் பிருக்கிறது. ஜூலை 25,26,30,31ல் சந்திரனால் சிறு  தடைகள் வரலாம். பெண்கள் சிறப்பான வாழ்வு அமையப் பெறுவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். பிள்ளைகளின் விஷயங்களில் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம்.  நிதானம் தேவை. ஆனால் வழக்கமான சம்பளம், பதவி உயர்வுக்கு தடை இருக்காது. ஆக.10,11 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் உதவி கிடைக்கும். ஆக.1,ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து  சீதனப்பொருள் வரப் பெறலாம்.

கும்பம்:

இந்த மாதம் சூரியன், புதன், குரு, சனி, ராகு மாதம் முழுவதும் நன்மை தருவர். மேலும் சுக்கிரன் ஆக.2 க்கு பிறகு சாதக பலன் கொடுப்பார். சூரியனால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். சமூக கவுரவம் உயரும். புதனால் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். தற்போது குருபகவான் 9-ம் இடத்தில் இருந்து நன்மை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொழில், பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

மீனம்:

இந்த மாதம் செவ்வாய், கேதுவால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். சந்திரன் பெரும்பாலும் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்று இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால்  முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. பொதுவாக குரு பகவான் மனவேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். அதற்காக கவலைப்பட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் 7-ம் இடத்துப்பார்வை  சிறப்பாக உள்ளது. இதனால் உங்களுக்கு வரும் இடையூறு அனைத்தும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். அவரால் குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி, வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். தொழிலதிபர், வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் ஏற்படலாம். ஜூலை 17,ஆக.12,13ல் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். சனி,ராகுவால் வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தி ஏற்படலாம். அதிக முயற்சி எடுத்தே வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டியதிருக்கும்.