ஆசிய மல்யுத்த போட்டி : இந்தியாவுக்கு 2 வது வெள்ளிப் பதக்கம்

May 15, 2017, Chennai

Ads after article title

டெல்லி, மே 15 (டி.என்.எஸ்) டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின், ஆண்கள் 125 கிலோ பிரீஸ்டைல் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித், ஈரான் வீரர் யடோல்லா முகமத் காசிமுடன் மோதினார்.


இதில், இந்திய வீரர் சுமித் 2-6 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்து தங்கத்தை நழுவிட்டு, வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.

இந்த போட்டியில் 5 வெள்ளி, 4 வெண்கலம், ஒரு தங்கம் என்று இந்தியா 10 பதக்கங்கள் வென்றுள்ளது.