ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் : வெள்ளி பதக்கம் வென்றார் சாக்‌ஷி மாலிக்

May 13, 2017, Chennai

Ads after article title

டெல்லி, மே 13 (டி.என்.எஸ்) டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றார்கள்.


ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், 60 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஜப்பான் வீராங்கனை ரிசாகோ கவாயுடன் மோதிய மாலிக், 0-10 என்ற கணக்கில் தோவ்லியடைந்து தங்கத்தை நழுவவிட்டு, வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.

மற்றொரு வீராங்கனை வினேஷ் போகத் 55 கிலோ எடைப்பிரிவில் ஜப்பான் வீராங்கனையிடம் 4-8 என வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றார்.