அழகில்லாத கணவர் : கொலையாளியான புதுமணப்பெண்

May 09, 2017, Chennai

Ads after article title

கடலூர், மே 09 (டி.என்.எஸ்) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக திருமணான இளம் பெண், தனது கணவர் அழகாக இல்லை என்ற காரனத்தால், அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் அருகே 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவருக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஒரு வாரத்தில், திடீரென்று ஒரு நாள் தனது கணவரை யாரோ கொன்றுவிட்டார்கள், என்று அப்பெண் அழுது ஒப்பாரி வைத்துள்ளார்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட போலீசார், அப்பெண்ணின் மீது சந்தேகப்பட்டு, அவர்களது பாணியில் விசாரித்த போது, தனது கணவரை கொலை செய்ததை அவரே ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது கணவர் அழகாக இல்லை என்றும், தனக்கு பொருத்தமானவர் இல்லை என்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூறியதால் கணவர் மீது வெறுப்பை காட்டி வந்த அந்த பெண், கணவருட சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் ஆத்திரமடைந்து அவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார். 

இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தற்போது அவரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.