அரசியல்வாதிகளின் சதுரங்காட்டம் - ஜெயிக்க போவது யார்? தோற்பது நாமாக இருக்கவேண்டாமே!

April 18, 2017, Chennai

Ads after article title

Chennai, April 18:  தமிழ் திரைப்படத்துறையில் எம்.ஜி.ஆரின் புகழுக்கும் மக்கள் செல்வாக்கிற்கும் ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை என்றால் மிகையாகாது.


திறைத்துறை அல்லாது அரசியலிலும் ஆர்வம் கொண்டவர்.  அவரின் திரைப்படங்களில் அரசியல் சார்ந்த வசனங்களும் பாடல்களும் நிச்சயம் இருக்கும். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு பல காரணங்களால் அவர் தி.மு.கவிலிருந்து விலகி தனி கட்சி துவங்கினார். 1972ஆம் ஆண்டு அ.தி.மு.க கட்சி உருவானது. 

1973ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக வென்றது. 1977 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வராக பொறுப்பேற்றார். 1987 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் மறைவிற்க்கு பிறகு அவரது மனைவி ஜானகிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே நடந்த போட்டியில் பல தொல்லைகளையும் தோல்விகளையும் சந்தித்த பிறகே ஜெயலலிதா
அ.தி.மு.க பொது செயலாளர் பதவி ஏற்றார். 

எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா- இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள், மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள். ஆனால் அவர்கள் முதல்வர் நாற்காலியில் சுலபமாக அமர்ந்துவிடவில்லை. பல சோதனைகளை எதிர்கொண்டவர்கள் தான். எம்.ஜி,ஆரின் உழைப்பில் உறுவான கட்சியை, ஜெயலலிதா வழிநடத்திய கட்சியை எங்கிறிந்தோ வந்த மன்னார்குடி குடும்பம் அபகரிக்க முற்ப்பட்டது. 

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இந்த வருடத்தின் துவக்கத்தில் நடந்தது. அவரது நூற்றாண்டு காலத்தில் தான் பொதுச்செயலாளர் சிறையில் இருக்கிறார், கட்சியின் சின்னம் பறிபோனது, கட்சியின் பெயர் முடக்கப்பட்டது, இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது, இவை எல்லாவற்றுக்கும் சிகரமாக தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் தர முற்பட்ட காரணத்தால் துணைப்பொதுச்செயலாளரை கைது 
செய்ய தில்லி போலிஸ் வந்துள்ளது. 

தற்போது ஐ.டி ரெய்டு பல அமைச்சர்கள் தூக்கத்தை கெடுத்து தலைக்கு மேல் கத்தியாக தொங்குகிறது.  “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பதை போல சிதறிய கட்சியினால் சின்னம் பறிபோனது. சின்னத்தை மீட்க கட்சி ஒன்றுபட்டால் தான் முடியும் ஆனால் ஒன்றுபட மன்னார்குடி குடும்பம்அ.தி.மு.கவை விட்டு விலக வேண்டும் என்பது தான் ஓ.பி.எஸ் தரப்பின் முக்கிய 
டிமேண்ட். அரசியல் சதுரங்காட்டம் நடக்கிறது. பரபரப்பான சூழலில் உள்ளது தமிழக அரசியல். ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும். கட்சி ஒன்றுபட்டு விரைவாக ஆட்சி அமைக்கபட வேண்டும். பல அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு தீர்வை எதிர் நோக்கியுள்ளோம். இவர்களின் அரசியல் விளையாட்டை ரசிக்கும் நிலையில் இல்லை தமிழகம். இதனை அதிகாரத்தில் உள்ளவர்களும் உணர  வேண்டும்.