.

அம்மா உணவகம் போல ஆந்திராவிலும் மலிவு விலை உணவகம்!

July 12, 2018, Chennai

Ads after article title

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் போல ஆந்திர மாநிலத்திலும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.


டி.ராமராவ் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகங்களுக்கு 'அண்ணா உணவக்கங்கள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. என்.டி.ராமராவை ஆந்திராவில் அன்பாக அண்ணா என்று அழைக்கிறார்கள், அதனால் இந்த உணவகங்களுக்கு அண்ணா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 60 அண்ணா உணவகங்கள் முதல்கட்டமாக நேற்று தொடங்கப்பட்டது. விஜயவாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘அண்ணா’ உணவகங்களை தொடங்கி வைத்து உணவு சாப்பிட்டார்.

இங்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேலைகளிலும் சாப்பாடு ரூ.5 மலிவு விலையில் வழங்கப்படுகிறது.