.

அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்த இங்கிலாந்து வீரர்

August 11, 2018, Chennai

Ads after article title

இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல்நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் இன்று டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது.


இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள்.

இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஆண்டர்சன் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் இங்கிலாந்து மண்ணில் 350 விக்கெட்டுக்களை கைப்பற்றி, சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை அணில் கும்ப்ளே உடன் பகிர்ந்துள்ளார்.

இலங்கையின் முத்தையா முரளிதரன் 493 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார். வார்னே 319 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.