.

அதிகம் கட்டணம் வசூலித்தால் தண்டனை - திருப்பதி தேவஸ்தனம் அறிவிப்பு

August 11, 2018, Chennai

Ads after article title

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். மேலும், இன்று கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியுள்ளதால், அதை தொடர்ந்து வரும் 2 மாதங்களில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.


இதனால், பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.

அப்படி திருப்பதிக்கு வரும் பக்தர்கள், ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மட்டும் இன்றி, தனியார் வாகனங்களிலும் திருமலைக்கு செல்கிறார்கள். இந்த பயணத்திற்காக பெரியவர்களுக்கு ரூ.65 என்றும், சிறுவர்களுக்கு ரூ.40 என்றும் போக்குவரத்துத்துறை கட்டணம் நிர்ணயித்துள்ளது.

ஆனால், அதை தாண்டி தனியார் வாகனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் வாகனங்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தனம் அறிவித்துள்ளது.