அக்‌ஷய திருதியையின் யாரும் அறிந்திராத சில உண்மைகைள் - நம்பினால் நம்புங்கள்

April 28, 2017, Chennai

Ads after article title

April 28: இன்று அக்‌ஷய திருதியை தினம்.  இந்நாளில் நாம் செய்யும் தான தர்மங்கள், நற்பணிகளுக்கான புண்ணியங்கள் பல மடங்காக பெருகும் என்று கூறப்படுகிறது.


 ‘அக்‌ஷய’ என்றால்  “அள்ள அள்ள குறையாத” என்ற ஒற்றை கருத்தை கொண்டு தங்க வியாபாரிகள் பல ஆண்டுகளாக இந்நாளை வியாபாரமாக மாற்றி வைத்துள்ளனர்.  உண்மையிலேயே இந்நாளில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் சேறுகிறதா என்ற கேள்வி தான் எழுகிறது. 

இந்த கட்டுரை பகுத்தறிவுக்கானதல்ல அதனால் ஆராய்ச்சி தேவையில்லை.  இதிகாசங்களில், இந்து புராணங்களின் படி இந்நாளின் மகத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

தசாவதாரங்களில் ஒன்றான பரசுராமர் அவதரித்த தினம். 

அன்னை அண்ணப்பூரணி பிறந்த தினம்

அக்‌ஷய திருதியை நாளில் தான் திரேதா யூகம் துவங்கியது

வனவாசத்தின் போது பாண்டவர்களின் மூத்தவரான யுதிர்ஷ்ட்ரன் சூரிய தேவனிடமிருந்து வரமாக அக்‌ஷய பாத்திரத்தை பெற்ற தினம். 

வேத வியாசர் கூற விநாயகர் மகாபாரத இதிகாசத்தை இந்நாளில் தான் எழுத துவங்கினார். 

சிறுவயது நண்பர் குசேலன் கிருஷ்ணருக்கு அவல் கொடுத்ததும் அது செல்வமாக மாறி குசேலனின் வறுமையை போக்கிய தினம். 

ஆகாய கங்கை நிலம் நோக்கி வந்த தினம்

இவ்வாறு பல மகத்துவங்களை கொண்ட தினத்தை வெறும் தங்கம் வாங்கும் தினமாக மாற்றிய பெருமை இந்திய தங்க வணிகர்களையும் சில ஜோதிடர்களையே சேரும். 

இந்நாளில் எதை எல்லாம் தானமாக தரலாம்? உணவு, குடை, உடைகள், கை விசிறி போன்றவற்றை தானமாக வழங்கலாம். அது போல பசுவுக்கும் கன்றுகுட்டிக்கும் உணவளிப்பதும் பெரும் புண்ணியம். 

ஆடைகள், போர்வைகள் தானம் தந்தால் சுகபோக வாழ்வு கிட்டும். 

தயிர், பால் சாதம் தாம் தந்தால் ஆயுள் நீளும்

இனிப்புகள் தானமாக தந்தால் திருமண பிராப்தம் கிட்டும். 

அரிசி பருப்பு தானமாக தந்தால் விபத்துகள் தடுக்கபடும்

பசு, நாய் ஆகிய விலங்குகளுக்கு உணவளித்தால் மன நிம்மதி மற்றும் செல்வம் அதிகரிக்கும். 

இந்நாளில் தங்கம் வாங்குவது தவறில்லை ஆனால் வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.