 கடந்த இரண்டு வருடங்களாக தசாவதாரம் தயாராகிவருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை நேரு உள்விளையாட்டு
அரங்கில் இந்த படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழா
நடைபெற்றது. இதில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான்,
முதலமைச்சர் மு கருணாநிதி, பாலிவுட் நடிகர்
அமிதாப்பச்சன், மம்முட்டி, விஜய், மல்லிகா ஷெராவத்,
ஜெயப்பிரதா, ஹேமாமாலினி போன்றவர்கள் கலந்து கொண்டது
நீங்கள் அறிந்த செய்தியே.
தசாவதாரம் படத்திற்கு இதுவரை 80 கோடி ரூபாய்
செலவிடப்பட்டுள்ளதாம். ஒவ்வொரு காட்சியிலும்
பிரம்மாண்டம் நிறைந்துள்ளது உறுதி என்கிறார் இதன்
தயாரிப்பாளர் ஆஸ்கர் வி ரவிச்சந்திரன்.
அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம் படங்களை
தொடர்ந்து இயக்குநர் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில்
கமலஹாசன் நடிக்கும் நான்காவது படம்தான் இந்த தசாவதாரம்.
இதுவரை தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற இயக்குநர் என்று பெயர்
வாங்கி வந்தேன். அதற்குக் காரணம் நான் குறுகிய
காலத்தில் படமெடுத்துத் தருபவன். ஆனால் தசாவதாரம்
எடுக்க இரண்டு வருடங்களை தாண்டிவிட்டது. இனி என்னை
எப்படி அழைப்பார்களோ என்று கமலிடம் சொல்லி
ஆதங்கப்பட்டாராம் கே எஸ் ரவிகுமார்.
இப்படத்தில் புகைப்படங்களின் தொகுப்பை பார்த்த
முதல்வர், கமலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த
சம்பவத்தை பலரிடம் சொல்லி பெருமைப்பட்டு வருகிறார் கமல்.
தசாவதாரம் தொடங்கியவுடன் முதல் பத்து நிமிட காட்சியை
யாரும் பார்க்கத் தவறக்கூடாது என்கிறார்கள் சிலர்.
அதற்குக் காரணம் சுமார் ஆயிரக்கணக்கான யானைகள்,
குதிரைகள், பெரிய பெரிய பள்ளக்குகளில் நின்று
மிரளவைக்கும் பிரம்மாண்டத்தை திரையில் தந்துள்ளாராம்
கே எஸ் ரவிகுமார். இந்த காட்சியை மட்டும் எடுப்பதற்கு
பல லட்சங்களை தண்ணீராய செலவு செய்துள்ளாராம் ஆஸ்கர்
ரவிச்சந்திரன்.
வேதியர், 80 வயது பாட்டி, ஆப்ரிக்கர், அமெரிக்க
ஜனாதிபதி புஷ், தமிழகத் தலைவர் என்று கமலின் பத்து
அவதாரங்களை பார்த்த ஜாக்கிசான், இதற்கான மேக்கப் எப்படி
தத்ரூபமாக அமைந்தது என்று ஆச்சர்யத்துடன் கமலிடம்
கேட்டுள்ளார்.
படத்தில் ஐந்து பாடலுக்கு இசையமைத்துள்ளார் இந்தி
சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் இமேஸ் ரேஷ்மியா. அதில்
அந்த பாடலில் வாலி எழுதியுள்ள கல்லை மட்டும்
கண்டிருந்தால், பாடல் தெலுங்கு, இந்தியில் மிகவும்
பிரபலமான பாடலாகிவிட்டது.
தசாவதாரம் மே 24 அல்லது ஜுன் 12 அன்று வெளிவரும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் ஒரே
சமயத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் படத்திற்கு
ஆயிரத்து 100 பிரதிகள் போடவுள்ளார்களாம். |