'விஞ்ஞானத்தின்
வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ளும் ஹீரோக்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம். தற்போது அந்த பட்டியலில்
இடம் பிடித்திருப்பவர் சீயான் விக்ரம். சினிமாவில் ஒரு
குறிப்பிட்ட வளர்ச்சி வரைதான் ரசிகர்களை அடிக்கடி
சந்திக்க முடியும். அதன் பிறகு ஷுட்டிங், கதை, விவாதம்,
வெளிநாடு பயணம் என்று பிஸி ஷெட்யூலில் மாட்டிக்
கொள்வார்கள்.இந்த இடைவெளியை தீர்க்க என்ன வழி என்று
யோசித்தபோது, எனக்கென்று ஒரு வெப்சைட்டைத் தொடங்கி,
அதில் என்னைப் பற்றிய தகவல் சாட்டிங், இந்த நிமிடம்
நான் எந்த ஊரில் என்ன கெட்டப்பில் இருக்கிறேன் என்பதை
உடனுக்குடன் அப்டேட் செய்து கொண்டால், எதாவதொரு
மூலையில் நான் இருந்தாலும் என் ரசிகனுடன் தொடர்பில்
இருப்பேன் என்றார் விக்ரம்.
தன்னுடைய பிறந்த நாள் அன்று 'கண் தானம்'
செய்துள்ளார் விக்ரம். இத்தகவலை கேள்விப்பட்ட அவரது
ரசிகர்கள் ஒரே நாளில் 1300 பேர் கண்தானம் செய்து
அசத்திவிட்டார்களாம். |