'இதுவரை
கவர்ச்சியாக நடிக்க மறுத்துவந்த மோனிகா, 'சிலந்தி'
என்ற படத்தில் போதும் போதும் என்கிற அளவிற்கு கவர்ச்சி
தர்பார் நடத்தி உள்ளாராம். படத்தில் இரண்டு பாடல்கள்
இடம்பெற்றிருக்கின்றனவாம். நூற்றுக்கும் மேற்பட்ட
விளம்பரப் படங்களுக்கும், ஆறு ஆல்பத்திற்கும்
இசையமைத்திருக்கும் எம் கார்த்திக் இப்படத்தின் மூலம்
இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்பாடல் காட்சிகள்
படமாக்கியதைப்பற்றி இயக்குநர் ஆதி சொல்லும் தகவல் இதோ.....
நாயகன் முன்னாவும், நாயகி மோனிகாவும், கொஞ்சம்
விளையாடும், இது காதல் மின்சாரமா..... இல்லை காளை
உற்சாகமாக?".... என்ற பாடல் காட்சி பாண்டிச்சேரியில்
நான்கு நாட்கள் படமாக்கப்பட்டிருக்கிறது. சொக்க
வைக்கும் இந்தப் பாடல் காட்சி காதல் ரசம் சொட்ட
கவிதையாய் படமாக்கப்பட்டுள்ளது. மோனிகா 60 அடி உயர
அருவியில் கவர்ச்சி உடையில் கும்மாளம் போட்டிருக்கும்
"சந்தன வேட்டைக்காரா... இது மன்மத நாட்டுக்காடா".....
என்ற பாடலை ஸ்வேதா சுரேஷ் தன் போதைக் குரலில்
பாடியிருக்கிறார். சமீபத்தில் ஆப்பர் ஹிட்டான "கத்தாழக்கண்ணால
குத்தாத நீ என்ன"..... பாடலுக்கு நடனம் அமைத்த தினா,
இப்பாடலுக்கு செம ஸ்டைலான மூவ்மெண்ட்ஸ் கொடுத்து
மோனிகாவை அசத்தலாக ஆட்டம் போட வைத்துள்ளார். விரைவில்
திரைக்கு வர இருக்கும் சிலந்தி இளசுகளுக்கு மிகவும்
பிடித்தமான படமாக இருக்கும் என்றார் இயக்குநர் ஆதி. |