|
தமிழ் சினிமா இயக்குநர்கள் ஹீரோக்களாக மாறிவரும்
இந்நிலையில், ஒரு பாடலாசிரியர் நாயகனாக நடித்துவரும்
படத்தின் பெயர் 'தாய் காவியம்' என்பது உங்களுக்கு
தெரிந்த செய்தியே. 'கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு'...
எனற் பாடல் மூலம் பரபரப்பாக பேசப்பட்டு, 'ஆட்டோ கிராப்'
படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே'... பாடல்
மூலம்தேசிய விருது பெற்ற கவிஞர் பா விஜய்தான், பரபரப்பு
ஹீரோவாக நடித்து வருகிறார். முதல்வர் கருணாநிதியின்
தாய்காவியத்தின் மூலம் நடிகனாகி உள்ளேன். "நீயல்லவோ
நிலாக்காலம்...
நானல்லவோ கனாக்காலம்
நாம் சேர்ந்தால் விழழக்கோலம்"... எனத் தொடங்கும்
இப்பாடலை சீனாவிலுள்ள 'ஊர்மிச்சி' என்ற இடத்தில்
படமாக்கினோம். நடிப்பு எனக்கு புதுசு. ஆனால்
பயிற்சியின் மூலம் நல்ல அனுபவம் பெற்றுள்ளேன்.
செயற்கைத்தனம் தெரியாமல் யதார்த்தமாக நடிப்பதாக பலர்
பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது ஆக்ஷன் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ஆக்ஷன்
ஹீரோவாக நடிக்கிறேன். வங்காள நடிகை சுதர்சனா எனக்கு
ஜோடியாகவும், என்னுடைய அம்மா கேரக்டரில் குஷ்பு
நடிக்கிறார். படம் பாதி முடிவடைந்துவிட்ட நிலையில் ஜுன்
மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே
நிறையப் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகின்றது. 'தாய்
காவியம்' வெளிவந்த பிறகுதான் மற்றப்படங்களில்
நடிப்பதென்ற திடமான முடிவுடன் இருப்பதாக சொல்கிறார் பா
விஜய். |