குழந்தைகளுக்கான படைப்பிலக்கியங்கள் தமிழில் வெகுவாக
குறைந்துவிட்ட வேதனை ஒரு பக்கமும், உண்மையான குழந்தைகள்
படம் தமிழில் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்ட வருத்தம்
இன்னொரு பக்கமும் இருக்கட்டும். அதே சமயம்
குழந்தைகளுக்கு கதை சொல்ல கூடிய சூழலில் இன்றைய
பெரும்பாலான பெற்றோர்கள் இல்லை. இது நிதர்சனமான உண்மை
என்கிறார்கள் களஞ்சியம் அறக்கட்டளை நிறுவனத்தினர்.'பப்பரமிட்டாய்' குழந்தைகளுக்காக குழந்தைகளே கதை
சொல்லும் இசையுடன் கூடிய ஆடியோ ஆல்பத்தை சமீபத்தில்
நடிகர் தனுஷ் வெளியிட, 'வெயில்' பட இசையமைப்பாளர் ஜீ
வி பிரகாஷ் பெற்றுக் கொண்டார். இப்போதெல்லாம் நமது
குழந்தைகளுக்கு கதை சொல்ல தாத்தா பாட்டிகளுக்கே நேரம்
இல்லை. நாமும் அதோ பாரு ஸ்டாரு, அங்கே பாரு நிலான்னு
சொல்வதோடு சரி, அதற்கு மேல் சொல்ல நேரமும் இல்லை
யோசிக்கவும் முடியவில்லை. ஆனால் இந்த பப்பரமிட்டாய்
சிடி, அந்த குறையை போக்கும் வணண்ம் வெளிவந்துள்ளது. இது
குழந்தைகளுக்கு பெரிய கொடுப்பினை. நானும், என் பையன்
யாத்ரா இதிலுள்ள ஐந்து கதைகளை கேட்டு மகிழ்வோம்.
குழந்தைகளை குதுகலப்படுத்துவதும் ஒரு கதைதான் என்றார்
தனுஷ். குழந்தைகளுக்கு எங்கள் குழந்தைகளே கதை சொல்வதை
ஒருநாள் நான் பார்த்தபோது உருவானதுதான் 'பப்பரமிட்டாய்'
ஐடியா என்கிறார் களஞ்சியத்தின் இயக்குநர் முனுசாமி
ரவிராஜ். |