தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Tamil
 in
   
 
 
 
 
 
மீனா, நயன், பசுபதி, விளக்கம்

குசேலன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு பசுபதி, நயன்தாரா, மீனா ஆகியோர் வராதது குறித்து பல்வேறு சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் எழுந்துள்ள நிலையில் இவர்கள் மூவருமே இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

'கரிக்கெண்ட தங்கம்மா' என்ற தெலுங்குப் படத்தில் நடித்துவருகிறார் மீனா. இதற்காக 27 ந் தேதியே ஐதராபாத் போய்விட்டேன். அதே நேரத்தில் குசேலனின் டப்பிங் வேலைகள் ஐதராபாத்திலேயே நடப்பதால் படப்பிடிப்பு முடிந்ததும் டப்பிங்கும் பேசி வருகிறேன். அதனால்தான் விழாவுக்கு வர முடியவில்லை என்று கூறியிருக்கிறார் மீனா.

ஏகன் படப்பிடிப்பின் கடைசி நாள் ஷூட்டிங்கில் இருந்ததால் தன்னால் வர இயலவில்லை என்று கூறுகிறார் நயன்தாரா. குசேலன் இசை வெளியீடு அன்று மாலைதான் படப்பிடிப்பைத் துவங்கினார்களாம். ஷூட்டிங் தொடங்கிச் சில மணி நேரத்திலேயே அங்கிருந்து கிளம்பினால் நன்றாக இருக்காது என்பதால்தான் இவர் வரலில்லை என்று சொல்லப்படுகிறது.

பசுபதியின் நிலை என்ன? வெடிகுண்டு முருகேசன் படப்பிடிப்பிற்காக மூணாறில் இருந்தாராம் பசுபதி. அதனால்தான் தன்னால் வர இயலவில்லை என்று கூறியிருக்கிறார் அவர்.

பொதுவாக, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தால் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளை அனுப்பி வைத்துவிட்டு, வேறு சீன்களை எடுப்பது வழக்கம். இவர்கள் விஷயத்தில் ஏன் அப்படி நடக்கவிலலை என்ற கேள்வியைச் சிலர் எழுப்புகிறார்கள்.

மேலும் July 5th, 2008

Previous:     அமீருக்காக அவசரம் காட்டிய பாலசந்தர்


மேலும்
Flowers - Many Congratulations R

Online Homeopathy Consulting!
BSE/NSE Live
Horoscope with 10 Year's Prediction
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy