போர் பிரேம்ஸ் தியேட்டரில் குசேலன் திரையிடப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்த்தாராம் ரஜினி. படம் திரையில் ஓடிக்கொண்டிருக்க, ரஜினியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாராம் பி. வாசு. க்ளைமாக்சில் ரஜினியே கண்கலங்க, அந்த நேரத்தில்தான் இந்த படம் ஜெயிச்சிடுச்சு என்ற உணர்வே வந்ததாம் வாசுவுக்கு. படம் முடிந்ததும் வாசுவை ஆரத் தழுவித் தன் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டாராம் சூப்பர் ஸ்டார்.
இது ஒரு பக்கம் இருக்க, இதற்கு நேர் எதிரான இன்னொரு செய்தி. குசேலன் படம் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்காகவும் திரையிடப்பட்டதாம். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த முக்கிய பிரமுகர் ஒருவர், "அருகில் இருந்த மற்றொருவரிடம் இந்த படத்துக்கு முன்பதிவு செய்திருந்தா உடனடியாக வேறு யாரு கிட்டேயாவது வித்துடுப்பா..." என்று கூற, பெரும் குரலெடுத்துச் சிரித்தார்களாம் இருவரும்.
|