கிட்டதட்ட 70 சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு மானியம் வாங்கிக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம. நாராயணன். திரைத் துறையில் தன் நெருங்கிய நண்பராக இருக்கும் இராம. நாராயணன், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றது முதல்வரை ரொம்பவே உற்சாகப்படுத்தியிருக்கிறது.
வேறு என்ன வேண்டும் என்று கேட்காத குறையாக இவரைப் பாராட்டியவரிடம், சமயம் பார்த்து இன்னொரு வேண்டுகோளையும் வைத்திருக்கிறார். நலிந்த தயாரிப்பாளர்களுக்கு சென்னையில் எங்காவது வீட்டு மனை ஒதுக்க வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள். உடனடியாக இதற்குச் சம்மதம் தெரிவிக்கா விட்டாலும், எப்படியாவது செய்து கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் முதல்வர்.
இதற்கிடையில் ஐந்து கோடி ருபாய் மக்கள் வரிப்பணத்தை இப்படிப் பாழாக்கலாமா என்று மானியம் குறித்து ராமதாஸ் அறிக்கை விட்டிருப்பதும் இராம. நாராயணனின் இரண்டாவது கோரிக்கை தள்ளிப் போனதற்குக் காரணமாக இருக்கும் என்கிறார்கள்.
|