இப்போதெல்லாம் புதிய மரியாதையோடு விசாரிக்கப்படுகிறார் ப்ரியாமணி. காரணம் தேசிய விருது. இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் ப்ரியாமணியின் செல்போன் சிணுங்கிக் கொண்டேயிருந்தது. ஏ.வி.எம் நிறுவனத்திலிருந்து போன் வந்ததுடன், பெரிய பெரிய திரையுலக ஜாம்பவான்கள் எல்லாம் அவருக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.
அவற்றையெல்லாம் விட ஆச்சர்யம் தந்தது இன்னொரு அழைப்புதான். எதிர்முனையில் வாழ்த்து சொன்னவர் இயக்குநர் ஷங்கர். அமெரிக்காவில் இருந்து போன் செய்தாராம். தேசிய விருதுக்காக வாழ்த்துத் தெரிவித்தவர், சென்னை வந்ததும் உங்களைச் சந்திக்கிறேன். பேச வேண்டும் என்றாராம். ஒருவேளை ரோபோவில் முக்கிய வேடம் ஏதாவது கொடுப்பாரோ? இப்படிக் கண்களில் கனவுகளைத் தேக்கிக்கொண்டு காத்திருக்கிறார் ப்ரியாமணி.
|