தன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பாக்கி இருக்கிறதா என்று கேட்டு, அப்படி இருந்தால் அது முடியும்வரை எடுப்பதற்காகக் காத்திருக்கும் வழக்கம் கொண்டவர் ரஜினி. விட்டுப்போன காட்சிகளை எடுத்து முடித்தபின் இயக்குனரின் முன்பாகவே மீசையை எடுத்துவிடுவாராம். அதற்கு பிறகு நடிப்பதற்காக அழைக்கக் கூடாது என்பதைச் சொல்லாமல் சொல்கிற டெக்னிக் அது.
அப்படி குசேலன் படத்தின் இறுதி நாளன்று மீசையை எடுத்துவிட்ட ரஜினி, சில நாட்கள் கழித்து மறுபடியும் பேட்ச் வொர்க்குக்காக வந்து நடித்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். பசுபதி தோளில் ரஜினி கைபோட்டுக் கொண்டே நடந்து போவது மாதிரி காட்சி.
இருவருடைய முகத்தையும் காண்பிக்காமல் பேக் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிக்காக ஏ.வி.எம். வந்திறங்கிய ரஜினி, மேக்கப் போடாமல் ஒரு சில நிமிடங்களில் நடித்துக் கொடுத்துவிட்டுப் போனாராம். "படப்பிடிப்பில் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தீங்க. நன்றி" என்று பசுபதியின் கைகளைக் குலுக்கிவிட்டுக் கிளம்பினாராம்.
|