சென்னை எழும்பூர். எண்ணற்ற உள்ளங்களில் ஏராளமான எண்ணங்க ளை தோற்றுவிக்கும் ரயில் நிலையம்.
 தெற்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் சென்னை வந்து சேருவோருக்கு இதுதான் முக்கிய நுழைவாயில். யாரையேனும் வரவேற்கப் போகும்போது ஏற்படும் மகிழ்ச்சி. யாரையேனும் வழியனுப்பி வைக்கும் போது ஏற்படும் துக்கம், அந்த புத்தகக் கடையில் நல்ல நூல் வாங்கிப் படிக்கும்போது ஏற்படும் திருப்தி. ரயில்வே காண்டீனில் நமக்கு பிடித்த வற்றை வாங்கிச் சாப்பிடும்போது ஏற்படும் மன நிறைவு. நாம் முதன்முத லில் எழும்பூரில் வந்து இறங்கியதை அசைபோடும்போது ஏற்படும் ஆனந்தம் இப்படி பல உணர்வுகளை தட்டி எழுப்பும் மையம் எழும்பூர்.
அதற்கு நூறு வயதாகிவிட்டது. உலகின் பல்வேறு கட்டிடயியல் வகைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட கம்பீரமான கட்டிடம். ராபர்ட் சிசோ வல்மிட் என்பவர் இதை வடிவமைத்தார். வெகு நீளமாக வந்து நிற்கும் ரயிலைகூட குறுக்கிக் காட்டும் அளவுக்கு பிரம்மாண்டம். சென்னை நகரம் பெருமை கொள்ளும் அளவில் ஒரு கட்டிடத்தை வழங்குகிறோம் என்று அன்றைய தென்னிந்திய ரயில்வே, அப்போது கூறியது, எவ்வளவு எதாரத்தம்.
ஜி டி நாயுடு, தமக்கு புத்தகம் வாசிக்கவேண்டும் என்று தோன்றும் போ தெல்லாம் நீண்டதூர ரயிலில் ஏறிவிடுவாராம். ரயில் யாத்திரை ஒரு சாதாரண பயணத்தைவிட பெரியது. இந்த உலகில் இதைவிட அழகான ஒரு கனவு யாத்திரை இருக்க முடியாது. எழும்பூர் நிலையம் சென்னைக்கான ஒரு நுழைவாயில் மட்டுமல்ல. அந்த வழியாக வந்து பிரபலமடைந்த திரை நட்சத்திரங்களும், வியாபாரப் பிரமுகர்களும், கல்வியாளர்களும், வழக்கறிஞர்களும், நீதிபதிகளும், அரசியல் தலைவர்களும் ஏராளம்.
எத்தனையோ பேர்களது மகிழ்ச்சிக்கு அது ஒரு நுழைவாயிலாக இருந் திருக்கிறது. அதேசமயம் எத்தனையோ பேரின் துக்கத்திற்கும் அதுதான் நுழைவாயிலாக சாட்சியம் வகித்திருக்கிறது. இன்றும் உயிரோட்டமும், நம்பிக்கை உணர்வும் நிறைந்த ஒரு மையமாக திகழ்கிறது என்றால் மிகையாகாது.
ஹெச் ராமகிருஷ்ணன்
|